2010-10-21 15:17:14

திருத்தந்தை - நேர்மை, ஒளிவுமறைவற்ற அணுகுமுறை, ஒருங்கமைவு ஆகிய பண்புகளில் ரொமேனிய நாடு வளர அழைப்பு


அக்.21,2010 - மேலும், இவ்வியாழனன்று திருப்பீடத்துக்கான ரொமேனிய நாட்டுப் புதிய தூதர் Bogdan TĂTARU-CAZABANடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, ரொமானியாக் குடியரசு, ஐரோப்பிய சமுதாய அவையில் முழுவதுமாக இணைந்ததன் மூலம் உண்மையான ஜனநாயகத்தை நோக்கிய தேடலில் மைல்கல் பதித்து வருகிறது என்று கூறினார்
நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளின் சர்வாதிகாரக் கோட்பாடுகளின் நுகத்தடி மக்களின் மனதுகளில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் நேர்மை, ஒளிவுமறைவற்ற அணுகுமுறை, ஒருங்கமைவு ஆகிய பண்புகளில் வளருமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
 நீண்டகால வளமையான மரபுகளைக் கொண்ட ரொமானியா, அரசுக்கும் பல்வேறு சமயத் தலைவர்களுக்குமிடையே நேர்மையான உரையாடலையும், பல்வேறு சமய குழுக்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதன் வழியாகக் கடந்த காலத்தின் அநீதிகளை அகற்ற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.