2010-10-21 15:00:46

அக்டோபர் 22 நாளும் ஒரு நல்லெண்ணம்


பேச்சு ஒரு கலை. ஒரு மனிதன் பன்முகத் தன்மையில் வளருவதற்கு அவனது பேச்சுத் திறமை முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. தவளை தன் வாயால் கெடும் என்பது போல ஒருவன் அழிவதற்கும் அவனது பேச்சே காரணமாக அமைகின்றது. மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுக்கலை இறைவன் மனிதனுக்கு செய்த அருள் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே இந்தப் பேச்சை ஆக்கத்திற்குப் பயன்படுத்தலாமே. வள்ளுவரும்

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்

இம்மையும் இன்பம் தரும் என்று சொன்னார். இனியசொற்கள் இருபிறப்பிலும் இன்பந்தரும். மேலும், மனமகிழ்ந்து பொருள் கொடுப்பதைவிட இன்சொற்களைக் கூறுவதே சிறந்தது.

அக்டோபர் 22, திக்குவாய் அல்லது தெற்றிப் பேசுவோர் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள். அமெரிக்க ஐக்கிய நாட்டின் முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட திக்குவாயர்கள் உட்பட உலக அளவில் தெற்றிப் பேசும் இலட்சக்கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் 1998ம் ஆண்டு ISAD என்ற இந்த சர்வதேச நாள் உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.