2010-10-20 15:29:55

சிலே நாட்டு சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுடன் இணைந்து நன்றித் திருப்பலி


அக்.20,2010. கடந்த வாரம் சிலே நாட்டு San Jose சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட 33 தொழிலாளர்களில் இருபது பேரின் குடும்பங்களுடன் இணைந்து அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவித் தலைவரான Gonzalo Duarte நன்றித் திருப்பலியை அண்மையில் நிறைவேற்றினார்.
இத்திருப்பலியானது அச்சுரங்கப் பகுதியில் நிறுவப்பட்ட தற்காலிக பீடத்தில் நிறைவேற்றப் பட்டது.
69 நாட்கள் பூமிக்கடியில் புதையுண்டிருந்த 33 தொழிலாளர்களின் குடும்பங்கள் அச்சுரங்கப் பகுதியில் கூடாரங்களை அமைத்து இரவும் பகலும் செபங்களை எழுப்பி வந்ததைப் பெருமையோடு குறிப்பிட்ட ஆயர் Duarte, குடும்பங்கள் ஒவ்வொரு மனிதரையும் வளர்க்கும் ஒரு முக்கிய இடம் என்பதை வலியுறுத்தினார்.கடந்த 70 நாட்களாக உலகின் கவனத்தை ஈர்த்த சிலே நாட்டைத் தங்கள் செபத்தால் காத்து வரும் பெண்கள், சிறப்பாக வயது முதிர்ந்த பெண்கள் அந்நாட்டின் முதுகெலும்பு என்று அவர்களைப் புகழ்ந்தார் ஆயர் Gonzalo Duarte.







All the contents on this site are copyrighted ©.