2010-10-19 16:30:24

இலங்கையின் போர்க்கால அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் கழகம் விண்ணப்பித்துள்ளது


அக். 19, 2010. இலங்கையின் போர்க்கால அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை அவை ஒன்றை உருவாக்க இலங்கை வெளியுறவு செயலருடன் ஆன சந்திப்பின்போது வலியுறுத்தவேண்டும் என பிரிட்டானிய வெளியுறவு செயலரை விண்ணப்பித்துள்ளது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம்.

இலங்கை அரசின் ஒப்புரவு அவை மற்றும் ஐநா பொதுச்செயலரால் உருவாக்கப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரணை அவை குறித்த முழு நம்பிக்கைகள் இல்லாத நிலையில் தனிச்சுதந்திரமுடைய சர்வதேச விசாரணை அவை துவக்கப்படுவதே சிறந்த வழி என பிரிட்டன் வெளியுறவுச் செயலர் William Hagueஇடம் விண்ணப்பித்துள்ளது Amnesty International அமைப்பு.

போர்க்காலத்தின்போது பொதுமக்கள் உணவு, நீர், மருத்துவ உதவிகள் இன்றி அச்சத்துடனும், காயங்களுடனும் வாழ்ந்தது மற்றும் இன்னும் அந்நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என உரைத்த இம்மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரி Kate Allen, உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி திரிவது கவலைதருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.