2010-10-19 16:38:03

அக்டோபர் 20 நாளுமொரு நல்லெண்ணம்


நள்ளிரவில், அடர்ந்த இருளில், கடலில் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே விளக்கு ஒன்று அணைந்து, அணைந்து எரிந்ததைப் பார்த்தார்கள். மற்றொரு கப்பல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஆபத்தில் வருவதை உணர்ந்த அவர்கள் செய்தி ஒன்று அனுப்பினார்கள்... "உங்கள் கப்பலைத் திசை திருப்புங்கள்." என்று. "முடியாது. நீங்கள்தான் உங்கள் கப்பலைத் திசை திருப்ப வேண்டும்." என்று எதிர் முனையிலிருந்து பதில் வந்தது.
கப்பலில் இருந்தவர்களுக்குக் கோபம் எழுந்தது. அவர்கள் பயணித்த கப்பல்தான் அன்றையக் காலக் கட்டத்தில் உலகத்திலேயே மிகப் பெரும் கப்பல் என்று சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் மமதையுடன், கோபத்துடன், "உலகிலேயே மாபெரும் ஒரு கப்பலில் நாங்கள் வருகிறோம். இதனுடன் மோதினால், உங்களுக்குத் தான் ஆபத்து. எனவே, உங்கள் கப்பலைத் திசை திருப்புங்கள்." என்று மீண்டும் செய்தி அனுப்பினார்கள்.
"உங்கள் கப்பல் உலக மகாக் கப்பலாக இருக்கலாம். ஆனால் கரையின் மேலுள்ள எங்கள் கலங்கரைவிளக்கத்தை நோக்கி உங்கள் கப்பல் வந்து கொண்டிருக்கிறது. உங்கள் பதில் என்ன?" என்று மறுமுனையிலிருந்து செய்தி வந்தது.மமதை, பெருமை இவை பல சமயங்களில் நம் பார்வையை மறைத்துவிடும்.







All the contents on this site are copyrighted ©.