2010-10-18 16:04:14

அக்டோபர் 19 நாளும் ஒரு நல்லெண்ணம்


நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று சிலர் ஒவ்வொரு வாரத்தையும் தொடங்குவார்கள். இன்னும் சிலரோ, இந்த வாரத்தில் என்ன பிரச்சனைகளோ என்று சொல்லிக் கொண்டே திங்கட்கிழமை வெளியே கிளம்புவார்கள். அப்போது அவர்களைத் தலைவலியும் தானாகத் தொற்றிக் கொள்ளும். இத்தகையவர்கள் சூடாகக் காப்பியையோ தலைவலி மாத்திரையையோ மருத்துவரையோ நாடத் தேவையில்லை. ஓர் எளிதான, செலவு இல்லாத வைத்தியம் இதோ....

நம் ஒவ்வொருவருக்கும் மூக்கில் வலது, இடது என இரு நாசித் துவாரங்கள் இருக்கின்றன. மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதற்கு இந்த இரண்டு துவாரங்களையும் பயன்படுத்துகிறோம். உண்மையில் இவையிரண்டுமே வெவ்வேறானவை. வலது பக்கத் துவாரம் சூரியனையும் இடது பக்கத் துவாரம் சந்திரனையும் குறிக்கின்றன. தலைவலி வரும்போது மூக்கின் வலது பக்கத்தை மூடிக் கொண்டு இடது பக்கத்தால் சுவாசிக்க வேண்டும். சுமார் ஐந்து நிமிடங்களுக்குள் தலைவலி மறைந்துவிடும். அதேபோல் களைப்பாய் இருப்பதாக உணரும் போது இதற்கு மாறாகச் செய்ய வேண்டும். மூக்கின் இடது பக்கத்தை மூடிக்கொண்டு வலது பக்கத்தால் சுவாசிக்க வேண்டும். சிறிது நேரத்தில் களைப்புப் போய்விடும். வலது பக்கம் வெப்பமாக இருப்பதால் அது எளிதில் சூடாகி விடுகின்றது. இடது பக்கம் குளிர்ச்சியாக இருக்கும். அன்பர்களே, இந்த எளிய பயிற்சியைச் செய்து பாருங்கள்

இப்படித்தான் கடும் தலைவலியால் அடிக்கடித் துன்பப்பட்ட, ஏறக்குறைய ஒவ்வொரு நாள் இரவுமே துன்பப்பட்ட ஒருவர் வலிநிவாரண மாத்திரைகளை எடுத்தார். அடிக்கடி மருத்துவரைச் சென்று பார்த்தார். ஒன்றும் பயன்தரவில்லை. எனவே இந்த மூச்சுப் பயிற்சி முறையை ஒரு நண்பர் அவருக்குப் பரிந்துரை செய்ய அதையும்தான் செய்து பார்க்கலாமே என்று முயற்சித்தார். ஒரு வராத்திற்குள்ளாக அவரது தலைவலி காற்றோடு காற்றாய்ப் பறந்துவிட்டது.







All the contents on this site are copyrighted ©.