2010-10-16 16:05:00

ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறாருக்குப் பாதுகாப்பு வழங்கத் திருப்பீடம் அழைப்பு


அக்.16,2010: சிறார் உரிமைகள் குறித்த அனைத்துல ஒப்பந்தத்தை அமல்படுத்தாத அரசுகள் விரைவில் அதனைச் செயல்படுத்துமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.

உலகில் சிறாரின் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறாருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

போர் இடம் பெறும் இடங்களில் சிறார் மற்றும் இளையோரின் நிலைமை குறித்துப் பேசிய பேராயர் சுல்லிக்காட், உலகெங்கும் ஏறக்குறைய 2,50,000 சிறார் படைவீரர்களாகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

குடும்பங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகச் சிறாரும் இளையோரும் உரிமை மீறல்களையும் கைதுகளையும் மரணத்தையும் எதிர்நோக்குகின்றனர் என்றும், இத்தகைய அதிர்ச்சிதரும் குற்றங்கள் எக்காலத்திலும் ஒழிக்கப்பட நாடுகள் தேவையான உரையாடலில் ஈடுபடுமாறும் வலியுறுத்தினார் திருப்பீடப் பார்வையாளர் பேராயர் சுல்லிக்காட்.







All the contents on this site are copyrighted ©.