2010-10-16 16:10:08

மலையைக் குடைந்து பிரமாண்ட இரயில் பாதை


அக்.16,2010: உலகின் மிக நீண்ட மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலையை குடைந்து பிரமாண்டமானக் கணவாய் இரயில்பாதையினை சுவிட்சர்லாந்து வெற்றிகரமாக நடத்தியது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரினையும், இத்தாலியின் மிலான் நகரினையும் இணைக்கும் இந்த ரயில்பாதை 57 கி.மீ தூரம் கொண்டது.

இந்த பணியில் மொத்தம் 2500 பேர் ஈடுபட்டனர். எனினும் கட்டுமானப் பணியின் போது எட்டுப் பேர் இறந்துள்ளனர்.

பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்திற்கும் இந்த கணவாய் பயன்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படும். எனினும் இந்தப் பாதை 2017-ம் ஆண்டில்தான் இரயில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் எனக் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.