2010-10-15 16:02:12

இசுலாம் வல்லுனர்கள்: மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கிறிஸ்தவர்கள் தேவை


அக்.15,2010. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் முழுவதும் அகற்றப்பட்டால் அப்பகுதி முழுவதும் துன்புறும் என்று சுன்னி மற்றும் ஷியைட் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு இசுலாம் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

திருத்தந்தையின் அழைப்பின் பேரில் வத்திக்கானில் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் Ayatollah Mohaghegh Damad, Muhammad al-Sammak ஆகிய இரண்டு இசுலாம் வல்லுனர்கள் இவ்வியாழன் பிற்பகலில் திருத்தந்தையைச் சந்தித்தனர், அத்துடன் இம்மான்றத்தில் பிற்பகலில் பேசிய போது இவ்வாறு கூறினர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் மட்டும் துன்பப்படவில்லை, அவர்கள் மட்டுமே குடிபெயர வேண்டுமென்ற சோதனைக்கு உட்படவில்லை என்று தெரிவித்த அவ்வல்லுனர்கள், கிறிஸ்தவர்களின் துன்பங்களில் தாங்களும் பங்கு கொள்கின்றோம் என்று கூறினர்.

கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான உறவுகளில் இருளான நேரங்கள் இருந்து வருகின்ற போதிலும் குரானின் கண்ணோட்டத்தின்படி கிறிஸ்தவ-முஸ்லீம் உறவானது நட்பு, மதிப்பு மற்றும் பரஸ்பர புரிந்து கொள்ளுதலைக் கொண்டது என்று Ayatollah Mohaghegh Damad ஆயர் மாமன்றத் தந்தையர்களிடம் கூறினார்.

இம்மாமன்றத்தில் கலந்து கொள்ளும் சுன்னிப் பிரிவைச் சேர்ந்த லெபனனின் உரையாடலுக்கானக் கிறிஸ்தவ-முஸ்லீம் கமிட்டியின் பொதுச் செயலர் Muhammad al-Sammak, Shiite பிரிவைச் சேர்ந்த தெஹ்ரான் Shahid Beheshti பல்கலைக்கழகப் பேராசிரியர் Ayatollah Seyed Mostafa Mohaghegh Damad Ahmadabadi ஆகியோர் இவ்வாறு பேசினர்.







All the contents on this site are copyrighted ©.