2010-10-14 16:07:11

பிலிப்பின்ஸ் அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு ஆயர்கள் எதிர்ப்பு


அக்.14,2010. பிலிப்பின்ஸ் அரசு சட்டமாக்க முயற்சிகள் செய்து வரும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அந்நாட்டின் ஆயர்கள் வன்மையாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் விவாதங்களில், திருச்சபை இயற்கை சார்ந்த கட்டுப்பாடுகளை வலியுறுத்தி வருகிறது. அரசோ செயற்கை முறைகளை வலியுறுத்தி வருகிறது.

மக்களின் வாழ்வையோ, தனி மனித மாண்பினையோ பாதிக்கும் விடயங்களில் திருச்சபை தலையிடுவது கடமை என்று கூறிய Caceres உயர்மறைமாவட்ட பேராயர் Leonardo Legapsi மக்கள் அளிக்கும் வரிப்பணத்தை அரசு இந்த செயற்கை முறைகளில் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று வலியுறுத்தினார்.

தலத் திருச்சபை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறதென்று உரைக்கும் ஆயர்கள், இது குறித்து பொதுவான, அறிவும் விசுவாசமும் சார்ந்த ஒரு உரையாடலை மேற்கொள்ள திருச்சபை என்றும் தயாராக உள்ளதென்றும் கூறியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.