2010-10-13 16:30:21

இராணுவத்திற்காகும் செலவு மக்கள் முன்னேற்றத்திற்குச் செலவிடப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி


அக்.13,2010 ஒவ்வொரு அரசாலும் இராணுவத்திற்கென செலவிடப்படும் தொகை மக்கள் முன்னேற்றத்திற்கும் ஏழைகளின் வாழ்வு மேம்படவும் செலவிடப்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இராணுவத் தளவாடங்கள் களைதல், அனைத்துலக பாதுகாப்பு குறித்து நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் முதன்மைக் குழுவின் கூட்டத்தில் இத்திங்களன்று பேசிய ஐ.நா.வின் திருப்பீடத் தூதுவர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாறு கூறினார்.
2010ம் ஆண்டு இராணுவத் தளவாடங்கள் களைதலுக்கு நம்பிக்கையூட்டும் ஓர் ஆண்டாக இருந்தாலும், உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பற்றச் சூழல் இந்த முயற்சிக்குப் பெரிதும் தடையாக உள்ளதென்று கூறினார் பேராயர் சுல்லிக்காட்.அணு ஆயுதங்கள் களைவு ஒரு முக்கியமான நம்பிக்கை தரும் முயற்சி என்று கூறிய பேராயர் சுல்லிக்காட், இரசாயன ஆயுதங்கள், உயிர்கொல்லி ஆயுதங்கள் இவைகளைக் குறித்து தன் கவலையைத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.