2010-10-13 16:31:14

அயலாருக்கு உதவிகள் செய்வதே உண்மையான மகிழ்ச்சி - பிரித்தானியர் கருத்து


அக்.13,2010 அயலாருக்கு உதவிகள் செய்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி உள்ளதென்று பிரிட்டனில் பாதி பேருக்கு மேல் கருத்து கூறியுள்ளனர்.
CAFOD, Tearfund ஆகிய உதவி அமைப்புகள் உண்மையான மனித நலம் எதில் அடங்கியுள்ளத என்ற ஆய்வை பிரிட்டனில் உள்ள வயது வந்தோர் மத்தியில் மேற்கொண்டன. இந்த ஆய்வின் முடிவுகளை இச்செவ்வாயன்று ஓர் அறிக்கையாக வெளியிட்டன.
இந்த அறிக்கையின்படி, ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 விழுக்காடு மக்கள் உண்மை மகிழ்ச்சி என்பது பிறருக்கு ஆற்றப்படும் சேவைகளில் உள்ளதென்று கூறியுள்ளனர். இவர்களில் 54 விழுக்காடு மக்கள் பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு உதவுவதும் மகிழ்ச்சி தரும் ஒரு காரணம் என்று கூறியுள்ளனர்.பொருளாதாரச் சரிவில் சிக்கியுள்ள உலகில் தங்கள் சொந்த வாழ்வைப் பாதுகாப்பதே தலையாய மகிழ்ச்சி என்று சொல்வதற்குப் பதில், பிறர் சேவையைப் பற்றி பெரும்பாலான மக்கள் கூறியிருப்பது நல்லதொரு போக்காகத் தெரிகிறதென்று Tearfund அமைப்பின் இயக்குனர் Matthew Frost கூறினார்.







All the contents on this site are copyrighted ©.