2010-10-13 16:31:00

அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றவர் சிறையில் இருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம்


அக்.13,2010 சீனச் சிறையில் இருக்கும் Liu Xiaobo அமைதிக்கான நொபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் கூறி வரும் விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல என்று சீன அரசு கூறியுள்ளது.
பல நாடுகளின் அரசியல் வாதிகள் இத்தருணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதும், சீனாவின் நீதித் துறைக்கு எதிராகப் பேசி வருவதும் கண்டனத்திற்குரியதென சீன வெளிநாட்டுத் துறையின் சார்பில் Ma Zhaoxu கூறினார்.
டிசம்பர் 10ம் தேதி Oslo வில் வழங்கப்படவிருக்கும் இப்பரிசினைப் பெற Liu தன் மனைவி Xiaவைக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள Xia, நாட்டை விட்டு வெளியேறுவது பெரும் கேள்விக் குறியென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.நொபெல் அமைதி விருது பெற்றுள்ள லியு, சீனாவில் குடியரசு முறைகள் கொண்டுவரப்பட வேண்டுமென போராடியதை, நாட்டில் கலகம் விளைவிக்க முயல்கிறார் என்று சீன அரசு குற்றம் சாட்டி, 2009ம் ஆண்டு டிசம்பரில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.