2010-10-12 15:49:11

ஆப்கானிஸ்தானில் போர்ச்சாவுகள் அதிகரித்துள்ளது குறித்துக் கவலையை வெளியிட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்கம்


அக்.12, 2010. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போர்ச்சாவுகள் அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்வதும் சிரமமாகியுள்ளதாகக் கவலையை வெளியிட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்கம்.

தென் நகரமான கந்தகாரில் உள்ள மருத்துவமனையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரம் பேர் போரால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயணம் செய்வதற்கு அஞ்சுவதாலும், சாலைத்தடைகளை சந்திக்க வேண்டியிருப்பதாலும் எண்ணற்ற நோயுற்ற குழந்தைகள் சிகிச்சையின்றியே உயிரிழக்கின்றன என்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.








All the contents on this site are copyrighted ©.