2010-10-11 17:00:40

முத்திபேறு பெற்ற மேரி மெக்கில்லாப், புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் திருச்சடங்கில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியர்கள் ரோமை நோக்கி பயணம்.


அக்.11,2010. முத்திபேறு பெற்ற மேரி மெக்கில்லாப் வருகிற ஞாயிறன்று ஆஸ்திரேலியாவின் முதல் புனிதராக அறிவிக்கப்பட விருக்கும் திருச்சடங்கில் கலந்து கொள்ள 8000க்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் ரோமை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பயணம் மேற்கொண்டுள்ள இந்த 8000 பேரைத் தவிர, இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை இன்னும் பல லட்சம் ஆஸ்திரேலியர்கள் காண உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஆஸ்திரேலிய மக்களுக்கும் பெருமை தரும் ஒரு நிகழ்வு என்று Cheryl Woodcroft என்ற மருத்துவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்கக் கல்விப் பணி எப்போதும் ஏழைகளுக்கு பணி செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதற்கு, இந்தச் சடங்கு மேலும் உறுதியளிக்கும் என்று உதவி தலைமை ஆசிரியையாக உள்ள Lyn Newell கூறினார்.

மேரி மெக்கில்லாப் புனிதராக்கப்படும் இச்சடங்கு குறித்து சிட்னியில் உள்ள Cathnews என்ற இணையதளம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.