2010-10-11 16:46:10

அக்டோபர் 12 நாளும் ஒரு நல்லெண்ணம்


உன்னிடம் உள்ள தெய்வீகத்தன்மைதான் “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்” என்பதற்கு உரிய சான்றாகும் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். இத்தகைய தெய்வீகப் பக்தியில் தன்னையே மூழ்கடித்து அதன் பலனை பிறர் அனுபவிக்கச் செய்தவர் முத்திப்பேறு பெற்ற Andre Bessette. இவர், வருகிற ஞாயிறன்று திருச்சபையின் புனிதர் பட்டியலில் இணைக்கப்படவிருக்கிறார். இவரிடமிருந்த ஆழமான பக்தியும் குணமளிக்கும் தெய்வீக ஆற்றலுமே இந்தப் பெருமையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றன. கானடாவின் மோன்ட்ரியலுக்கு அருகில் 1845ம் ஆண்டு பிறந்த ஆந்த்ரே, ஒன்பதாவது வயதில் தந்தையையும் பன்னிரண்டாவது வயதில் தாயையும் இழந்தவர். 1870ல் திருச்சிலுவை சபையில் சேர்ந்த இவர் புனித வளன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் மோன்ட்ரியல் நோத்ருதாம் கல்லூரியில் வாயில்காப்போனாகப் பணியாற்றியவர். தன்னிடம் வந்த மக்களிடம் நம்பிக்கையோடும் விடாஉறுதியோடும் செபிக்குமாறு வலியுறுத்தியவர். முத்திப்பேறு பெற்ற Andre Bessette, மோன்ட்ரியலின் புதுமை மனிதர் எனத் தலத்திருச்சபையால் அழைக்கப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.