2010-10-09 15:58:12

அக்டோபர் 10, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1888ல் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)
1906ல் - இந்திய எழுத்தாளர் ஆர். கே. நாராயண், (இ. 2001)
1908ல் - தமிழிசைப் பாடகியும், நாடக, திரைப்படக் கலைஞருமான கே. பி. சுந்தராம்பாள், ஆகியோர் பிறந்தனர். (இ. 1980)
1944 - இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் ஆஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
1964 – டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. இது உலகமெங்கும் முதல் முறையாக செயற்கைக் கொள் வழியாக ஒளி பரப்பப்பட்டது.
1974ல் தமிழறிஞர் மு. வரதராசனும், 2000த்தில் - உலகின் முதல் பெண் பிரதமரும், இலங்கையின் பிரதம மந்திரியுமான சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இறந்தனர்.
2009 – ஆர்மீனியாவும், துருக்கியும் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டன.
அக்டோபர் 10 – அகில உலக மன நலம் பேணும் தினம்அக்டோபர் 10 – அகில உலக மரண தண்டனை ஒழிப்பு தினம்







All the contents on this site are copyrighted ©.