2010-10-08 16:31:30

மரியன்னையின் பாத்திமா காட்சிகளை மையப்படுத்திய திரைப்படம்


அக்.07,2010 செமாலை அன்னையின் மாதம் என்று அழைக்கப்படும் இந்த அக்டோபர் மாதத்தில், மரியன்னையின் பாத்திமா காட்சிகளை மையப்படுத்திய திரைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது.

‘The 13th Day - A Story of Hope’ ‘பதிமூன்றாம் நாள் - நம்பிக்கையின் கதை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படம் 1917ம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பத்திமாவில் ஆடு மேய்க்கும் மூன்று சிறுவர் சிறுமிகளுக்கு மரியன்னை வழங்கிய காட்சிகளைக் காட்டுகிறது.

Ian மற்றும் Dominic Higgins என்ற இருவரால் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஒரு சிலத் திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. 85 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் கத்தோலிக்க உண்மைக் கழகம் (Catholic Truth Society) என்ற குழுவினரால் DVD ஒளிப்பேழை வடிவில் விநியோகம் செய்யப்படுகிறது.

பாத்திமாவில் நிகழ்ந்த அற்புதம் மிகச் சிறந்த முறையில் திரையில் கூறப்பட்டுள்ளதென்று திரைப்படத்தைக் கண்டு இரசித்த இலண்டன் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.