2010-10-08 16:29:44

நொபெல் அமைதி விருது ஆர்வலரை விடுவிக்குமாறு கத்தோலிக்கர் வலியுறுத்தல்


அக்.08,2010. இவ்வாண்டுக்கான அமைதி நொபெல் விருது பெற்றுள்ள சீன மனித உரிமை ஆர்வலர் Liu Xiaobo வை விடுதலை செய்யுமாறு ஹாங்காங் மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவையும் பிற மனித உரிமைகள் குழுக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நார்வேயின் ஓஸ்லோவில் இந்த நொபெல் விருது அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் ஹாங்காங்க்கிலுள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் கமிஷனர் அலுவலகம் முன்பாக இப்போராட்டம் நடை பெற்றது.

அமைதி விருது பெற்றுள்ள லியு, பேச்சு சுதந்திரம் தொடர்பான குற்றத்திற்காக 2009ம் ஆண்டு டிசம்பரில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டார். தற்போது இவர் சிறையில் இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதை இவ்வெள்ளியன்று அறிவித்த நார்வே நொபெல் குழுத் தலைவர் Thorbjoern Jagland, லியு, சீனாவில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்குப் பெருமளவாக உழைத்துள்ளார் என்று பாராட்டினார்.

இவர் 1989 முதல் சீன அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர். மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல போரட்டங்களை முன் நின்று நடத்தியவர். புரட்சி ஏற்படுத்தும் பல்வேறு நாவல்களை எழுதியவர்.

நொபெல் இலக்கிய விருது பெரு நாட்டை சேர்ந்த மரியோ வர்கோஸ் லோசாவுக்கு வழங்குவதாக இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்த எட்வர்டுக்கு மருத்துவ நொபெல் விருது கிடைத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.