2010-10-07 16:10:32

ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் தொலைக்காட்சி வழியாக 15 கோடி மக்களுக்கு திருத்தந்தை உரையாற்றுவார்


அக்.07,2010 வருகிற நவம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் திருக்குடும்பப் பேராலயத்தை அர்ச்சிக்கும் போது, அங்கு கூடியிருக்கும் 47,000 பேருக்கு மட்டும் அல்லாமல், தொலைக்காட்சி வழியாக 15 கோடி மக்களுக்கு திருத்தந்தை உரையாற்றுவார் என்று பார்சலோனா உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Lluis Martinez Sistach கூறினார்.
திருத்தந்தையின் பார்சலோனா பயணம் குறித்து இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Sistach, 1100 குருக்களுடன் திருத்தந்தை நிகழ்த்த விருக்கும் இக்கூட்டுத் திருப்பலியில் 47000 பேர் கலந்து கொள்வர் என்றும், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இத்திருப்பலியை மேலும் 15 கோடி மக்கள் கண்டு பயனடைவர் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் இந்த இரண்டு நாள் பயணத்திட்டங்களை எடுத்துரைத்த கர்தினால், இந்தப் பயணத்தை 2000க்கும் மேற்பட்ட தொலைதொடர்பாளர்கள் பல்வேறு வடிவங்களில் பகிர்ந்து கொள்வர் என்றும் கூறினார்.இறையடியார் அந்தோனி கவுதியால் (Antoni Gaudi) வடிவமைக்கப்பட்ட இத்திருக்குடும்பக் கோவிலை ஒரு பசிலிக்காவென திருத்தந்தை அறிவிப்பார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. என்பது ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டு வந்துள்ள இப்பேராலயம் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியச் சின்னமெனக் கருதப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.