2010-10-07 16:10:17

சிறையில் வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்க இலங்கை ஆயர் பேரவை வேண்டுகோள்


அக்.07,2010 இலங்கையில் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் படைத் தளபதியும், அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை ஆயர் பேரவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இராணுவ விதிமுறைகளை மீறினார் என்று பிப்ரவரி மாதம் 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் பாதுகாப்பிற்காக தன் உயிரையும் மதியாது உழைத்த பொன்சேகாவை, அவரது நாட்டுச் சேவையைக் கருதி விடுவிக்க வேண்டுமென்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது. ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் மால்கம் ரஞ்சித், பேரவையின் செயலர் ஆயர் நார்பர்ட் அந்த்ராதி இருவரும் இவ்வறிக்கையில் கையோப்பமிட்டுள்ளனர்.

இலங்கையின் எதிர் கட்சிகளும், புத்த மதத் துறவிகளும் பொன்சேகாவின் விடுதலைக்காக அரசுத் தலைவரிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.சரத் பொன்சேகா படைத் தளபதியாக இருந்த நேரம் அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, 30 மாதக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.