2010-10-05 15:44:00

டிரில்லியன் டாலர் இராணுவத்திற்கெனச் செலவு வளர்ச்சித் திட்ட இலக்குகளை அடையப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் – பான் கி மூன்


அக்.05,2010. உலகில் மில்லென்னிய வளர்ச்சித் திட்ட இலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் உலகில் இராணுவத்திற்கானச் செலவு 50 விழுக்காடு அதிகரித்துள்ளது, அதாவது 15 இலட்சம் கோடி டாலருக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

“அமைதிக்கான மதங்கள்” என்ற அமைப்பு நடத்தும் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய மூன், “ஆயுதங்கள் கைவிடப்பட வேண்டும், பகிரப்படும் பாதுகாப்புக்கு இளையோர் முயற்சி” என்ற கோஷங்களுடன் உலகில் ஆயுதக்களைவுக்கு சமயங்கள் எடுத்து வரும் முற்சிகளைப் பாராட்டினார்.

ஆயுதக் களைவும் ஆயுதப்பரவலைத் தடை செய்வதும் அனைத்துலக அமைதிக்கு மட்டுமல்லாமல் நாடுகள் மத்தியில் நம்பிக்கையையும் சர்வதேச மற்றும் மாகாண உறுதித்தன்மையையும் வளர்க்கும் என்றும் மூன் கூறியுள்ளார்.

50 இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் ஆயுதக் களைவுப் போராட்ட மனுவில் கையெழுத்திட்டுள்ளதையும் ஐ.நா.பொதுச் செயலர் தனது செய்தியில் பாராட்டியுள்ளார்








All the contents on this site are copyrighted ©.