2010-10-04 16:17:26

மாஃபியாவின் மரணப்பாதைக்கெதிராய்த் தைரியமுடன் போராட இத்தாலியக் குடும்பங்களுக்குத் திருத்தந்தை அழைப்பு


அக்.04,2010. திட்டமிட்ட குற்றம் வெட்கத்துக்குரியது, மேலும் இது ஏராளமான உடல் மற்றும் ஆன்மீகத் துன்பங்களுக்குக் காரணமாகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.



இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள பலேர்மோ நகருக்கு இஞ்ஞாயிறன்று திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, மிகவும் ஆழமாக வேரூன்றிய தீமைகளை ஒழிப்பதிலிருந்து மக்கள் விலகி இருக்கக் கூடாது மற்றும் கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்வதற்கு வெட்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.



பலேர்மோ கடற்கரைக்கு அருகில் சுமார் முப்பதாயிரம் விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்தி இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, திட்டமிட்ட குற்றக் கும்பலுக்கு எதிராய் மக்களை ஒன்று திரட்டிய பலேர்மோ அருட்பணியாளர் ஜூசப்பே புலிசி 1993ம் ஆண்டில் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.



தங்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்றதன்மையிலும் வேலையின்றியும் துன்பப்படும் மக்கள், சோர்வு ஒதுங்கியிருத்தல் ஆகியவை நோக்கிய சோதனைகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்றார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.