2010-10-04 08:59:31

அக்டோபர் 04 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1537 - மத்தியூ விவிலியம் (Matthew Bible) எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.

1582 - கிரகோரியின் நாட்காட்டி திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இதற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 ற்கு நாட்காட்டியில் மாற்றப்பட்டது.

1824 ல் மெக்சிகோவும்

1910 ல் போர்த்துக்கல்லும் குடியரசானது.

1884 ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும்,

1904 - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனும் பிறந்தனர்.

1965 – அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்ற முதலாவது பாப்பிறையாகத் திருத்தந்தை ஆறாம் பவுல் நியூயார்க் வந்தடைந்தார்.

1966 - பசூட்டோலாந்து (Basutoland) பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.







All the contents on this site are copyrighted ©.