2010-10-02 14:39:31

நாகா அமைதி உடன்பாட்டிற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு


அக்.02,2010. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் அம்மாநிலத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் அமைதி உடன்பாட்டிற்கு இசைவு தெரிவித்திருப்பதைக் கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாகாலாந்தில், நாகா ஒப்புரவு அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இவ்வுடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக Baptist World Alliance கிறிஸ்தவ சபையோடு தொடர்புடைய அனைத்துலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் எழுதியுள்ள திறந்த கடிதம் கூறுகிறது.

நாகா ஒப்புரவு அமைப்பு, நாகாலாந்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக 2008ல் உருவாக்கப்பட்டது.

இம்மாநிலத்தில் 1992ம் ஆண்டிலிருந்து இடம் பெற்று வரும் மோதல்களில் 2330க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.