2010-10-02 14:44:41

காடுகளை மேம்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு


அக்.02,2010. இந்தியாவில் காடுகளின் தரத்தை மேம்படுத்தவும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பதற்கும் ஏழு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

168 கி.மீ., தூரம் கொண்ட வனப் பகுதிகளில் புதிதாக பத்து கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யானைகள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை கடக்கும் போது ரயில்களின் வேகத்தை குறைப்பது தொடர்பாக, மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜியையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.

மேற்கு வங்கத்தில் சரக்கு இரயில் மோதி கடந்த வாரம் ஏழு யானைகள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.