2010-10-01 16:05:17

சரியான ஆவணங்களின்றி வாழும் பல இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்களின் உரிமைகளை எல்லா நாடுகளும் பாதுகாக்க வேண்டும் - ஐ.நா


அக்.01,2010. சரியான ஆவணங்களின்றி உலகெங்கும் வாழும் பல இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்களின் மனித உரிமைகளை எல்லா நாடுகளும் பாதுகாக்குமாறு ஐ.நா.ஆதரவு பெற்ற GMG என்ற உலகளாவிய குடியேற்றதாரர் குழு வேண்டுகோள் விடுத்தது.

நீண்டகாலத் தடுப்புக்காவல், முறைகேடாக நடத்தப்படல், அடிமைமுறை, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடுமைகளுக்கு இந்தக் குடியேற்றதாரர்கள் உள்ளாகின்றனர் என்று அக்குழு எச்சரித்தது.

நாடுகள் நியாயமானத் தங்கள் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டாலும் அந்நடவடிக்கைகளில் சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை என்ற குறறச்சாட்டையும் அக்குழு முன்வைத்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.