2010-10-01 16:00:55

ஐரோப்பாவுக்கு கடவுள் தேவைப்படுகிறார் - கர்தினால் எர்டோ


அக்.01,2010. மேலும், இந்த ஐரோப்பிய ஆயர்கள் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ ஐரோப்பாவின் இன்றைய நிலைமையை விவரித்தார்.

பல கலாச்சாரங்கள் நற்செய்தியை அறிந்த மற்றும் பல மறைபோதகர்கள் உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை அறிவிக்கச் சென்ற இந்த ஐரோப்பா தற்பொழுது தனித்துவப் பிரச்சனையை எதிர்நோக்கி வருகிறது என்றார் கர்தினால் எர்டோ.

ஐரோப்பாவுக்கு கடவுள் தேவைப்படுகிறார் என்று உரைத்த ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராகிய கர்தினால் எர்டோ, இக்கண்டம் தனது மூலத்தை நினைவுகூர்வதன் மூலம் தனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் கட்டி எழுப்ப முடியும் என்றும் கூறினார்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடனும் சகிப்பற்றதன்மையுடனும் நடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவித்த கர்தினால் எர்டோ, இக்கண்டத்திற்குப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி அவசியம் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.