2010-10-01 16:04:28

உலகப் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் பல நாடுகளில் வேலைக்கான வாய்ப்புகள் மோசமடைந்து வருகின்றன – ஐ.நா அறிக்கை


அக்.01,2010. உலகப் பொருளாதாரம் தற்சமயம் வளர்ந்து வந்தாலும் பல நாடுகளில் வேலைக்கான வாய்ப்புகள் மோசமடைந்து வருவதாகவும் தொழிற்சந்தை 2015ம் ஆண்டுவரை மந்த நிலையிலேயே இருக்குமெனவும் ILO என்ற உலக தொழில் நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது.

உலக வேலை அறிக்கை 2010 என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், பல நாடுகளில் குறிப்பாக, ஆசியாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் இந்நாடுகளில்கூட எண்பது இலட்சத்துக்கு மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டியிருக்கின்றன என்று கூறியது.

இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்ட 35 நாடுகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் ஓராண்டுக்கு மேலாக வேலையின்றி இருக்கின்றனர், இதனால் ஒழுக்கச் சீர்குலைவு, தன்னைப்பற்றிய நல்லெண்ணம் குறைபடுதல், மனநலப் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படுகின்றன என்று தெரிவித்தது.

வேலைவாய்ப்பின்மையால் இளையோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ILO கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.