2010-09-30 16:24:33

இஸ்ராயேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதி முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் - அமெரிக்க பல்சமயக் கோரிக்கை


செப்.30,2010. இஸ்ராயேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் முயற்சிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையுடன் அமெரிக்காவில் கத்தோலிக்க, கிறிஸ்தவ தலைவர்கள் பிற மதத் தலைவர்களுடன் சேர்ந்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹில்லரி கிளிண்டனை இப்புதனன்று சந்தித்துப் பேசினர்.
இன்றோ, இனி வரும் காலங்களிலோ இஸ்ராயேல், பாலஸ்தீன் நாடுகளுக்கிடையே அமைதி உருவாகாது என்ற குறைவு காணும் மனப்பான்மை எங்களிடையே அறவே கிடையாது என்று இம்மதத் தலைவர்கள் வெளியிட்டக் கூற்று வலியுறுத்துகிறது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதிக்குப் பெரியதொரு தடையாக இருப்பது நம்பிக்கை அற்ற மனமே என்றும், இறைவனால் ஆகாதது ஒன்றுமில்லை என்பது கிறிஸ்தவ விசுவாசம் என்றும் அமெரிக்க ஆயர் பேரவை நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவரான ஆயர் Howard J Hubbard கூறினார்.ஆயர் Hubbardஉடன், வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் Theodore E McCarrick, கிறிஸ்தவ மற்றும் யூத மத குருக்கள், இஸ்லாமியத் தலைவர்கள் என்று பலரும் ஹில்லரி கிளிண்டனை இப்புதனன்று சந்தித்தனர்.







All the contents on this site are copyrighted ©.