2010-09-29 16:07:35

நாடுகள் தங்களது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேசிய அளவில் சட்டங்களை வகுக்க வேண்டும் - திருப்பீட உயர் அதிகாரி


செப்.29,2010. நாடுகள் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட எல்லா மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்குத் தேசிய அளவில் சட்டங்களை வகுக்க வேண்டியது நாடுகளின் முக்கிய கடமை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
உலகளாவிய கோட்பாடுகளையும் எல்லாரும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பீடுகளையும் இனங்கண்டு ஊக்குவிப்பதற்கு உரையாடல் மற்றும் கல்வியில் புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அவ்வதிகாரி.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா.நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் சில்வானோ தொமாசி ஜெனீவாவில் மனித உரிமைகள் குறித்த 15வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய போது இவ்வாறு கேட்டுக் கொண்டார்.பொதுவான விவாதங்களில் அல்லது கலாச்சார, மெய்யியல் மற்றும் இறையியல் உரையாடல்களில் பொதுவான அல்லது தனிப்பட்டவரின் சுதந்திரம் என்ற பெயரில் மதங்கள் இழிவுபடுத்தப்படுவது அல்லது ஒரு மதத்திற்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.