2010-09-25 15:54:26

செப். 27-30 : சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவில் இரண்டாவது உலகத் திருத்தலப் பணியாளர் மாநாடு


செப்.25,2010. திருப்பயணங்கள் மற்றும் திருத்தலங்களில் மேய்ப்புப்பணி செய்வோர்க்கான இரண்டாவது உலக மாநாடு வருகிற திங்களன்று ஸ்பெயினின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெலாவில் தொடங்குகிறது.
இம்மாதம் 27 முதல் 30 வரை நடைபெறும் இம்மாநாட்டில் தமிழகத்தின் வேளாங்கன்னி திருத்தல அதிபர் அருள்திரு மைக்கிள் உட்பட 75 நாடுகளிலிருந்து சுமார் 250 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாடு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் ஆயர் Antonio Maria Vegliò, இம்மாநாடு திருத்தலங்களில் செய்யப்படும் மேய்ப்புப்பணிகளை இன்னும் திறம்படச் செய்ய உதவும் என்றார்.
இம்மாநாட்டிற்கெனத் திருத்தந்தையும் கருத்தாழமிக்க செய்தி ஒன்றை வழங்கியுள்ளார் எனவும் அவர் கூறினார்.இதில் ஆப்ரிக்காவின் 16 நாடுகள், அமெரிக்காவின் 21 நாடுகள், ஆசியாவின் 15 நாடுகள், ஐரோப்பாவின் 22 நாடுகள், ஓசியானியாவிலிருந்து ஒரு நாடு என 75 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.