2010-09-23 15:49:00

மியான்மாரில் தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்கள் விசாரணையை ஐ.நா. மேற்கொள்ள பத்து நாடுகள் வலியுறுத்தல்


செப்.23, 2010. மியான்மாரில் தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களைக் குறித்த விசாரணையை ஐ.நா. மேற்கொள்ள வேண்டுமென்று பத்து நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாடு என்ற அமைப்பின் கிழக்கு ஆசியத் தலைவரான Benedict Rogers இப்புதனன்று வெளியிட்ட ஒரு கூற்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ஐக்கிய நாடு மியான்மாரின் மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இம்மாதம் 3ம் தேதி Amnesty International என்ற அமைப்பும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. இவைகளைத் தொடர்ந்து, கனடா, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதை வலியுறுத்தி வருகின்றன.மியான்மார் மனித உரிமை மீறல்களை விசாரிக்க செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பிரிட்டன் அரசு ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.