2010-09-23 15:49:12

2015ம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலும் ஒழிக்கும் திட்டங்களை ஆப்ரிக்கத் தலைவர்கள் முன் வைத்துள்ளனர்


செப்.23, 2010. மலேரியாவை உலகிலிருந்து, சிறப்பாக ஆப்ரிக்காவிலிருந்து 2015ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் திட்டங்களை ஆப்ரிக்கத் தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.
இப்புதனன்று நியூயார்க்கில் ஐ.நா.வின் தலைமையகத்தில் மலேரியா ஒழிப்பு குறித்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற 35 ஆப்ரிக்கத் தலைவர்கள் இத்திட்டங்களைக் கலந்து பேசினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்ரிக்கக் கண்டத்தில் 8,50,000 பேர் இந்த நோயினால் மடிகின்றனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த நோயைக் கட்டுபடுத்தவும் முற்றிலும் ஒழிக்கவும் ஏழைகள் மத்தியில் கொசுவலைகள், மற்றும் மருந்து விநியோகம் ஆகியவைகளை மேம்படுத்தும் முயற்சிகள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன.சஹாரா பகுதிகளில் மிக வறிய நிலையில் இருக்கும் 70 கோடி மக்கள் மத்தியில் மலேரியா நோய் தடுப்பு முயற்சிகள் 2010ம் ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற தன் விருப்பத்தை ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.