2010-09-22 16:04:33

இவ்வாண்டில் சீனாவில் திருநிலைப்படுத்தப்பட்ட எட்டாவது ஆயர்


செப்.22, 2010. வத்திக்கானின் ஒப்புதலோடு சீன அரசின் ஒப்புதலும் பெற்ற ஒருவர் இச்செவ்வாயன்று சீனாவில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
சீனாவின் Yuncheng மறைமாவட்டத்தின் ஆயராக 47 வயதான Peter Wu Junwei இச்செவ்வாயன்று திருநிலைப்படுத்தப்பட்டார். வத்திக்கான், சீனா இரு புறமும் ஒப்புதல் பெற்று, இவ்வாண்டில் சீனாவில் திருநிலைப்படுத்தப்பட்ட எட்டாவது ஆயர் Peter Wu என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.திருத்தூதரான புனித மத்தேயுவின் திருநாளான இச்செவ்வாயன்று நடந்த ஆயரின் திருநிலைப்பாடு சடங்கில் 144 குருக்களும், 2000க்கும் அதிகமான பொது நிலையினரும் கலந்து கொண்டனர் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.