2010-09-21 15:40:03

நோய் தடுப்பு நடவடிக்கைகள் திட்டத்தில் கருத்தடை முறைகளையும் இணைக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்க ஆயர்கள் கண்டனம்.


செப். 21, 2010. நோய் தடுப்பு நடவடிக்கைகள் திட்டத்தில் கருத்தடை முறைகளையும் இணைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு நல அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

கருத்தடைகளுக்கான உதவியை நோய் தடுப்பு திட்டங்களின் கீழ் இணைக்கும் முயற்சி குறித்து கண்டனத்தை வெளியிட்ட ஆயர்கள், கர்ப்பம் தாங்குதல் என்பது நோய் என்பது போல் கணிக்கப்படக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.

கர்ப்பம் தாங்கலை தடுப்பது நோய்களைத் தடுப்பதற்கு இணையாகாது எனும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அரசின் இம்முயற்சிகள் நடைமுறைக்கு வருமேயானால் மதங்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளும், நலகாப்பீட்டுப் பொது நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

கருத்தடை சாதனங்களை ஊக்குவித்தல், கருத்தடை அறுவை சிகிச்சை போன்றவைகளை நலஆதரவுத் திட்ட்டத்தின் கீழ் நோய்த் தடுப்பு முறைகளாக வலியுறுத்துவது எவ்வித பகுத்தறிவு வாதத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.