2010-09-21 15:41:22

திருப்பீடக் கலாச்சார அவை - எல்லாவிதமான வளர்ச்சியும் நற்செய்தியில் தொடங்கி அதனையே மையம் கொண்டுள்ளது


செப்.21,2010. ஆப்ரிக்கக் கண்டத்தின் வளர்ச்சியில் மனிதனை மையப்படுத்தி இடம் பெறும் வழிகளையும் யுக்திகளையும் காணும் நோக்கத்தில் திருப்பீடக் கலாச்சார அவை திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்துடன் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஐவரி கோஸ்ட் நாட்டின் அபிஜானில் 2011ம் ஆண்டு மார்ச்சில் நடைபெறும் கூட்டத்திற்குத் தயாரிப்பாகத் தற்சமயம் அதே இடத்தில் அதற்கானத் தயாரிப்புக் கூட்டத்தை இம்மாதம் 27 முதல் அக்டோபர் ஒன்றாந்தேதி வரைத் திருப்பீடக் கலாச்சார அவை நடத்தவுள்ளது.

ஆப்ரிக்காவின் பல நாடுகள் அவற்றின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததன் 50ம் ஆண்டை இவ்வாண்டில் சிறப்பித்து வரும் வேளை, கலாச்சாரத்தின் மாபெரும் மனிதனான அலியோன் தியோப்பின் நூறாவது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வருகிறது என்று அவ்வவை கூறியது.

எல்லாவிதமான வளர்ச்சியும் நற்செய்தியில் தொடங்கி அதனையே மையம் கொண்டுள்ளது என்பதில் திருச்சபை உறுதியாய் இருப்பதாகவும் அவ்வவை கூறியது.








All the contents on this site are copyrighted ©.