2010-09-21 16:02:07

செப்டம்பர் 22 நாளுமொரு நல்லெண்ணம்


இந்திய கலாச்சாரத்தில் மஞ்சள் நிறம் மங்களத்தைக் குறிக்கும். இந்தியாவில் எந்த ஒரு மகிழ்வான, நலமான நிகழ்விலும் மஞ்சள், சந்தனம் அதிகம் துலங்கும்.
National Geographic என்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் நமக்கு அதிகம் பழக்கமான ஒரு நிறுவனம். இயற்கை குறித்த எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கென நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் இதழ் 1888ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்நிறுவனத்தின் அடையாளம் மஞ்சள் வண்ணக் கட்டம்.
இந்தக் கட்டத்தை ஒரு படச் சட்டமாகப் பார்க்கலாம். அல்லது ஒரு கதவு நிலையாகப் பார்க்கலாம். படச் சட்டமென்று பார்த்தால், அச்சட்டத்திற்குள் இயற்கையை நிரந்தரமாய், அற்புதமாய் காப்பாற்றி வைக்கும் முயற்சி தெரியும்.
கதவு நிலை என்று பார்த்தால், இயற்கை உலகிற்குள் நம்மை வரவழைத்து, இயற்கையையும், நம்மையும் வாழவைக்கும் முயற்சி தெரியும்.படச் சட்டமானாலும் சரி, கதவு நிலையானாலும் சரி... அதற்கு மஞ்சள் நிறம் பூசி, இயற்கையை மங்கலமாய் போற்றிக் காக்க நம்மை நினைவு படுத்துகிறது இந்த இயற்கை சார்ந்த முயற்சி.







All the contents on this site are copyrighted ©.