2010-09-21 15:41:02

இந்தியாவில் இந்து முஸ்லீம் பதட்டநிலைகள் அகலவேண்டும் என கிறிஸ்தவர்கள் ஜெபிப்பதாக அறிவித்துள்ளார் மும்பை கர்தினால்.


செப். 21, 2010. இந்தியாவின் அமைதிக்கான பாரம்பரியங்கள் எத்தகையச் சூழலிலும் காப்பாற்றப்படவேண்டும் என்பதை மனதிற்கொண்டதாய், அயோத்தி மசூதி குறித்தத் தீர்ப்புகள் நீதியானதாய், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளவல்லதாய், மதங்களிடையேயான இணக்க வாழ்விற்கு வழி வகுப்பதாய் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் இந்திய கர்தினால் Oswald Gracias.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தத் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில், இத்தீர்ப்பால் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகும் ஆபத்து உள்ளது என்ற மும்பை கர்தினால், இத்தீர்ப்பு எத்தகையதாயினும் அதனை அமைதியான முறையில் ஏற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை ஆன்மீகத்தலைவர்கள் என்ற முறையில் தாங்கள் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதி நிலவவும், ஒவ்வொருவரும் உண்மையான சகோதரத்துவத்தில் வாழவும் ஜெபிக்குமாறு அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார் மும்பை கர்தினால் கிராசியாஸ்.








All the contents on this site are copyrighted ©.