2010-09-20 16:04:02

செப்டம்பர் 21 நாளும் ஒரு நல்லெண்ணம்


சிலே நாடு விடுதலை அடைந்ததன் 200வது ஆண்டு இந்த செப்டம்பர் 18, அதாவது இந்தச் சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. அந்நாளில் சிலே அரசுத்தலைவர் Sebastian Pinera பல முக்கிய தலைவர்களுடன் நாட்டுப் பண்ணை முழங்கிய அதேநேரத்தில் அந்நாட்டின் மற்றொரு பகுதியில் சுமார் 2300 அடி ஆழத்திலிருந்து இதே பண் பாடபட்டதைக் கேட்டு மேலே இருந்த பலர் மெய்சிலிர்த்தனர். இப்படிப் பாடியவர்கள் வேறு யாருமில்லை. இவர்கள், தாங்கள் உயிருடன் வெளியே வருவோம், தமது நாட்டு அதிகாரிகள் தம்மை உயிருடன் மீட்பார்கள், தங்களது வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து பூமிக்கடியில் சிக்கியுள்ள 33 சுரங்கத் தொழிலாளர்கள்தான். இவர்கள் கையெழுத்திட்ட கொடிகளை அவர்களின் குடும்பத்தினர் இந்தச் சுரங்கத்திற்கு மேலே பிடித்துக் கொண்டிருக்க, உள்ளே அவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர். இவ்வெள்ளியன்று 30 செ.மீ.அளவிலான ஓட்டை அவர்கள் இருக்குமிடம் வரைச் சென்றுள்ளது. அதைப் பார்த்த அவர்கள் "சிலே வாழ்க!" என்று ஒருவரையொருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சி தெரிவித்த ஒளிக்காட்சிகளை மேலே இருப்பவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் 2060 அடி அல்லது 630 மீட்டர் ஆழம் வரை ஓட்டை போட்டால்தான் அவர்கள் வெளியே வர இயலும். இந்த வேலை நவம்பர் மாதத்தில்தான் முடியும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

ஆம். விடியலின் வெளிச்சமே ஒவ்வொருவரின் நம்பிக்கை. நேற்றைய மணிநேரங்களைப் பயன்படுத்தியதைவிட இன்றைய மணிகளை இன்னும் சிறப்பாக்கினால் வாழ்க்கைச் சிறந்தோங்கும்.








All the contents on this site are copyrighted ©.