2010-09-19 15:53:04

கர்தினால் நியூமனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்


செப். 19, 2010. கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் 1801ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ந்தேதி இலண்டனில் ஒரு பணக்கார ஆங்கிலிக்கன் குடும்பத்தில் 6 குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்தார். ட்ரினிட்டி கல்லூரியில் தன் 19வது வயதில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற இவர் 1825ல் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1833ல் இத்தாலியின் சிசிலி தீவிற்கு வந்து விட்டு அங்கிருந்து படகில் ஃபிரான்ஸ் செல்லும் வழியில் தான் 'Lead kindly Light' என்ற ஜெபப் பாடலை எழுதினார். ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைக்குருவாக இருந்த இவர், காலப்போக்கில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளாலும் நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு 1845 அக்டோபர் 9ம் நாள் கத்தோலிக்க மறையில் சேர்ந்தார். 1847ல் கத்தோலிக்கத் திருச்சபையில் குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1851ல் அயர்லாந்து பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராகவும் திருச்சபையால் நியமிக்கப்பட்டார் புதிய குரு நியூமன். 1879ம் ஆண்டு மே மாதம் 15ந்தேதி திருத்தந்தை 13ஆம் லியோவால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் நியூமன். 11 ஆண்டுகள் கர்தினாலாக சேவையாற்றிய நியூமன், 1890ஆம் ஆண்டு தன் 89ஆம் வயதில் காலமானார். இவர் உடல் பர்மிங்காமிற்கு அருகே Rednal எனுமிடத்தில் எட்டு நாட்களுக்குப்பின் அடக்கம் செய்யப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.