1870 – இத்தாலியப் படைகள் உரோம் நகரை கைப்பற்றியதால், திருத்தந்தை 9ம் பத்திநாதர் வத்திக்கானில்
ஒரு கைதி என்று தன்னை விவரித்தார். 1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய
மாநாட்டில் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். 1893 - பெண்களுக்கு வாக்குரிமை
வழங்குவதில் நியூசிலாந்து முதலாவது நாடானது. 1957 - அமெரிக்க அரசு நிலத்துக்கடியே
தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது. 1965 - அமெரிக்க விண்வெளி வீராங்கனை
சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார். 1980 - தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள்
காலமானார். 1985 - மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000
பேர் கொல்லப்பட்டனர்.