2010-09-18 16:27:05

கிறிஸ்தவ ஐக்கிய வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய உரை.


செப். 18, 2010. நம் இன்றையக் காலக்கட்டத்தில் நற்செய்தியின் நம்பகத்தகும் சாட்சியாக விளங்குவதை கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான முன்நிபந்தனையாக எடின்பர்க் அவைக்கூட்டம் அழைப்பு விடுத்ததுடன் துவங்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் நூறாமாண்டை இப்போது சிறப்பிக்கின்றோம். கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான நம் அர்ப்பணம் கிறிஸ்துவின் மீதான நம் விசுவாசத்திலிருந்து பிறக்கின்றது. நம் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் நாம் எதிர்நோக்கிய சவால்கள், ஆசீர்கள், ஏமாற்றங்கள், நம்பிக்கை அடையாளங்கள் போன்றவைகளை நாம் உணர்ந்தேயுள்ளோம். நம் ஒன்றிணைந்த பாதையில் நமக்கு நம்பிக்கைகள் இருப்பினும், நாம் எதிர்கொள்ளவேண்டிய சாவால்களையும் நாம் உணர்ந்திருக்கவேண்டும். இது கிறிஸ்தவ ஐக்கியக்கத்திற்கான பாதையில் மட்டுமல்ல, கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துரைப்பதற்கான பணியிலும்தான். இந்தத் தொன்மையான துறவுமடக் கோவிலில் கூடியிருக்கும் இவ்வேளையில் வணக்கத்திற்குரிய புனித Bede இன் எடுத்துக்காட்டை நினைவு கூர்கிறேன். இங்கிலாந்திலும், புனித Bede ம் அவர் காலத்தவர்களும் கட்டியெழுப்பிய ஐரோப்பாவிலும் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ மரபை மீண்டும் கண்டுகொள்ள இப்புனிதரின் எடுத்துக்காட்டு உதவுவதாக.








All the contents on this site are copyrighted ©.