2010-09-17 16:44:01

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கும் கருணை மன்னிப்பை வழங்கும் புதிய சட்டப் பரிந்துரையை, ஆயர்களின் எதிர்ப்பை முன்னிட்டு திரும்பப் பெற்றுள்ளது பெரு நாட்டு அரசு.


செப். 17, 2010. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கும் கருணை மன்னிப்பை வழங்க வழிவகுக்கும் புதிய சட்டப் பரிந்துரைக்கு எதிராக பெரு நாட்டு ஆயர்கள் தொடர்ந்து விமர்சித்ததையொட்டி அச்சட்டப்பரிந்துரையைத் திரும்பப் பெற்றுள்ளது அந்நாட்டு அரசு.

கொலைகள், சித்ரவதைகள், மக்கள் காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்புவதற்கு வழிவகுக்கும் சட்டப்பரிந்துரை குறித்து பெரு நாட்டு ஆயர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் பெருவில் இடம்பெற்ற அரசியல் வன்முறைகளில் இறந்தவர்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குவதற்கான அரசு திட்டக்குழுவின் தலைவர் பிரபல எழுத்தாளர் லூயி ஜியாம்பியேத்ரி ரோயாஸ் இச்சட்டப்பரிந்துரைக்குத் தன் எதிர்ப்பை வெளியிட்டு பதவி விலகியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.