2010-09-17 16:32:15

செப்டம்பர் 18 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த ஊரில் பண்டிகை நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டுப் பாட்டி தனது பேரக் குழந்தைகளுக்குப் பொம்மைகள் வாங்குவதற்காகப் பொம்மைக் கடைக்குச் சென்று பலவிதமானப் பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓர் ஏழைச் சிறுமி அந்தக் கடைக்கு வெளியே நின்று பொம்மைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் கவனித்த அந்தப் பாட்டி அந்தச் சிறுமியை அழைத்து அவளுக்குப் பிடித்தமானப் பொம்மையை வாங்கிக் கொடுத்தார். பொம்மையை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்ட அந்தச் சிறுமி அந்தப் பாட்டியிடம், நீங்கள் கடவுளா? என்று கேட்டாள். எதிர்பாராத இந்தக் கேள்வி அந்தப் பாட்டியை அதிர்ச்சியடையச் செய்தது. எனினும் சமாளித்துக் கொண்டு, அந்தச் சிறுமியைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, நான் கடவுள் இல்லை என்றார். அப்படியானால் நீங்கள் யார்? என்று கேட்டாள் சிறுமி. நான் கடவுளின் மகள் என்றாள் பாட்டி. அப்படியானால் உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கின்றது என்றாள் சிறுமி. ஆம். எனது செயல்கள் மற்றவருக்கு இறைமையை வெளிப்படுத்துகின்றனவா என்று சிந்திப்போமா!

மனிதன் தன்னை உணர்தல் இறைவனை உணர்தல் ஆகும். மனிதப் பிறவியினால் மட்டுமே கடவுளை உணர முடியும் என்று தவமுனிவர்கள் சொல்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.