2010-09-16 15:41:53

பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது - ஐ.நா. அதிகாரி


செப்டம்பர் 16, 2010 பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அகில உலக நிதி நிறுவனமான IMF 45 கோடி டாலர்கள் அளிக்க இருப்பதாகவும், ஐ.நா.அவை 50 கோடி டாலர் நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இரு வேறு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
இரண்டு கோடி மக்களுக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்த வெள்ளத்தால், பயிர்கள் மற்றும் உடமைகளை இழந்தோருக்கு மறுவாழ்வு, கொள்ளை நோய் தடுப்பு, என்று ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளதெனவும் இவைகளுக்கு வேண்டிய அளவு நிதி உதவிகள் இல்லை என்றும் ஐ.நா.மனிதாபிமான மற்றும் பேரழிவிற்கான அவசர உதவிகள் பிரிவின் தலைமைச் செயலர் Velerie Amos கூறியுள்ளார்.பாகிஸ்தான் பொருளாதாரத்தின் 21 விழுக்காடு வேளாண்மையை நம்பி இருப்பதால், அது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதேனவும், இந்தப் பேரிடருக்கு அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் ஆகிய இரு நாடுகள் கணிசமான அளவு உதவிகள் செய்துள்ளன, ஏனைய நாடுகளிலிருந்து அவ்வளவு உதவிகள் வரவில்லை என்று IMF நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.