2010-09-15 15:10:23

கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசாக இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு வழங்கப்படும் புனிதர்களின் திருப்பண்டங்கள்


செப்டம்பர் 15, 2010 எட்டுப் புனிதர்களின் திருப்பண்டங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசாக இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு வழங்கப்படுகிறது.
திருச்சபை பிளவுபடுவதற்கு முன் வாழ்ந்த புனிதர்களான திருமுழுக்கு யோவான், அன்னம்மாள், அப்போஸ்தலரான பர்த்தலோமேயூ, மறைசாட்சியான ஸ்டீபன், லாரன்ஸ் என எட்டுப் புனிதர்களின் திருப்பண்டங்கள் தாங்கிய ஒரு உல்லாசப் படகு இஞ்ஞாயிறன்று Volga நதியில் தன் பயணத்தை ஆரம்பித்தது.
அண்மையில் இரஷ்யாவில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பல இடங்களில் இப்படகு நிறுத்தப்படும் என்றும், இது தன் 1900 மைல் பயணத்தின் இறுதியில் மாஸ்கோ அடையும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இப்புனிதர்களின் திருப்பண்டங்கள் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கு அளிக்கப்படுவது ஆழ்ந்த ஒரு பொருள்படும் செயல் என்று இரஷ்யாவிலுள்ள திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Mennini, மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill ஆகியோர் கூறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.