2010-09-14 16:25:06

பிறரன்பு நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதில் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் முதலிடம் வகிக்கின்றன


செப்டம்பர் 14, 2010. பிறரன்பு நிறுவனங்களுக்கு உதவி வழங்குதல், சுய உதவி பணியாளர்களுக்கான ஆர்வம் ஆகியவற்றில் உலகிலேயே ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் முதலிடம் வகிப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

153 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் படி, பிறரன்பு நடவடிக்கைகளுக்கு என உதவுவதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, என்பவை முதலிலும் அயர்லாந்து மூன்றாவதாகவும் கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரியா, ஆகியவை அதற்குப் பின்னான வரிசையிலும் வருகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுள் பெரும்பான்மையினர் மதம் தொடர்புடைய பிறரன்பு நிறுவனங்களுக்கே நிதியுதவி செய்ய விரும்புவதாகவும், உலக அளவில் முதியோரே பிறரன்பு நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதாகவும் இவ்வாய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.