2010-09-14 16:24:31

கொழும்பு பெருமறைமாவட்டத்தில் தமிழ் கத்தோலிக்க செய்தி இதழ் ஒன்று துவக்கப்பட்டுள்ளது


செப்டம்பர் 14, 2010. கொழும்பு பெருமறைமாவட்டத்தில் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளை நோக்கி கத்தோலிக்கர்கள் செல்வதைத் தடுக்கும் நோக்குடன் அவர்களுக்கு உதவும் விதமாக தமிழ் கத்தோலிக்க செய்தி இதழ் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கர்கள் பிற சபைகளில் சென்று சேர்வதற்கு மொழியும் ஒரு காரணமாக இருப்பதை மனதிற்கொண்டு ‘ஞான ஒளி’ என்ற பெயரில் தமிழ் பத்திரிகை ஒன்று, பேராயர் மால்கம் ரஞ்சித்தின் ஆலோசனையின் பேரில் துவக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அதன் ஆசிரியர் குரு மனோகுமரன் நாகரத்னம்.

சிங்களமும் ஆங்கிலமும் தெரியாத கொழும்பு வாழ் தமிழர்களுக்கு இந்தப் பத்திரிக்கை திருச்சபைச் செய்திகளைப் பெறுவதற்கான வழியாக இருக்கும் என பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

141 பங்கு தளங்களைக் கொண்டுள்ள கொழும்பு பெருமறைமாவட்டத்தில் 28 பங்கு தளங்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருப்பதாகவும் இங்கு 15 தமிழ் குருக்களும் 400 தமிழ் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களும் பணியாற்றுவதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.