2010-09-13 16:26:12

திருப்பீட ஆயர் பேராயம் நடத்திய புதிய ஆயர்களுக்கானக் கூட்டத்தில் திருத்தந்தையின் உரை


செப்.13, 2010. ஆயர் என்பவர் உறுதியானவராக, தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவராக, நீதியும் அமைதியும் நிறைந்தவராக, மக்களையும் நிகழ்வுகளையும் குறித்த ஞானத்தோடு தேர்ந்து தெளிபவராக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீட ஆயர் பேராயம் நடத்திய புதிய ஆயர்களுக்கானக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆயர்களை காஸ்தெல் கந்தோல்போவிலுள்ள அப்போஸ்தலிக்க மாளிகையில் இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஆயர்கள் அணியும் மோதிரங்கள் பற்றி குறிப்பிட்டு பேசிய திருத்தந்தை, ஆயருக்கும் திருச்சபைக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக இந்த மோதிரம் உள்ளதெனவும், இதனை அணிவதால், ஆயர்கள் திருச்சபையின் பாரம்பரியத்தையும், படிப்பினைகளையும் பாதுகாக்கும் கடமை உள்ளவர்கள் என்பதை உணரவேண்டுமெனவும் திருத்தந்தை கூறினார்.

ஆயர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மறை மாவட்டத்தை மட்டுமல்லாமல், உலகையும் வழிநடத்த கடமை பட்டவர்கள் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அப்போஸ்தலர்களின் அரசியான அன்னைமரி, கூடியுள்ள அனைத்து ஆயர்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற தன் ஆசியுடன் தன் செய்தியை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.